முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய ஆப்கனில் 16 தலிபான்கள் சுட்டுக் கொலை

மத்திய ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்திய தலிபான்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதில் 16 தலிபான்கள் பலியாகினர், மேலும் 11 பேர் காயமடைந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கோப்புப்படம்
பகிர்:

மத்திய ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்திய தலிபான்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதில் 16 தலிபான்கள் பலியாகினர், மேலும் 11 பேர் காயமடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

ஆப்கானிஸ்தானின் மத்திய மாகாணமான உருஸ்கானின் டெஹ்ரா வூட் மற்றும் கிசாப் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் பலியாகினர், 11 பேர் காயமடைந்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், தெற்கு ஆப்கானிய மாவட்டமான மைவாண்டில் திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் படைவீரர்களுக்கு எதிரான தாக்குதலின் போது மூத்த தலிபான் தளபதி அனஸ் உள்பட 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.