முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊத்துக்கோட்டை ஸ்ரீ மகாகால பைரவர் கோயிலில் பைரவர் ஜெயந்தி விழா

ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள தொம்பரம் பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாகால பைரவர் கோயிலில் பைரவர் ஜெயந்தி நாளான இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
அலங்காரத்தில் ஸ்ரீ மகாகால பைரவர்
பகிர்:

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள தொம்பரம் பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாகால பைரவர் கோயிலில் பைரவர் ஜெயந்தி நாளான இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள தொம்பரம்பேடு கிராமத்தில் மகாகால பைரவர் கோயிலில் காலை முதலே 64 பைரவர்கள் போற்றும் விதமாக 64 கலசங்கள் வைத்து கலச பூஜைகள் மற்றும்  யாக வேள்விகள் செய்யப்பட்டது.

கோயில் வளாகத்தில் மலர்களால் பைரவர்களின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டு கோயில் வரும் பக்தர்களைக் கவரும் விதமாக செய்யப்பட்டு இருந்தது.

கோயில் வளாகத்தில் மலர்களால் பைரவர்களின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டது.

மேலும் மூலவர் வெள்ளி கவசத்தில் இருந்தது பைரவர் ஜெயந்தி யானை இன்று ஊத்துக்கோட்டை சுற்றுவட்ட கிராமத்திலிருந்து பெண்களும் ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டு பைரவரின் அருளைப் பெற்றனர். 

பைரவரின் அருளைப் பெற வந்த ஏராளமான பக்தர்களுக்கு  அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இரவு பைரவர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வருவார் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.