முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் 7-ஆம் கட்ட டிடிசி தேர்தல்: 57.22% வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீரில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 7-ஆம் கட்ட தேர்தலில் 57.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 7-ஆம் கட்ட தேர்தலில் 57.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் ஏழாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மொத்த 3,93,200 பேர் வாக்களித்த தேர்தலில் 57.22 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில், காஷ்மீரில் 39.52 சதவீதமும், ஜம்முவில் 71.93 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 

மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, டி.டி.சி தேர்தலின் முதலாம் கட்டத்தில் 51.46%, இரண்டாம் கட்டத்தில் 48.62%, மூன்றாம் கட்டத்தில் 50.53%, நான்காம் கட்டத்தில் 50.08%, ஐந்தாம் கட்டத்தில் 51.2%, ஆறாம் கட்டத்தில் 51.5% வாக்குகள் பதிவாகின.

டிசம்பர் 19-ம் தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →