கேரள உள்ளாட்சித் தேர்தல்: இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி
கேரளத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தற்போதைய செய்திகள்கேரள உள்ளாட்சித் தேர்தல்: இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி
கேரளத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கேரளத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கேரளத்தின் 14 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 76.63 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதில் கடந்த டிச.8-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின. டிச.10-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தோ்தலில் 76.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின. டிச.14-ஆம் தேதி நடைபெற்ற இறுதிகட்ட தேர்தலில் 78.62 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது, புதன்கிழமை காலை தொடங்கியதிலிருந்து ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்னிலை பெற்று வந்தது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள்:
| கிராம ஊராட்சி | ஊராட்சி ஒன்றியங்கள் | மாவட்ட ஊராட்சி | நகராட்சி | மாநகராட்சி | |
| இடதுசாரி ஜனநாயக முன்னணி | 514 | 108 | 10 | 35 | 3 |
| ஐக்கிய ஜனநாயக முன்னணி | 375 | 44 | 4 | 45 | 3 |
| தேசிய முற்போக்கு கூட்டணி | 23 | 0 | 0 | 2 | 0 |
| மற்றவை | 29 | 0 | 0 | 4 | 0 |
| மொத்தம் | 941 | 152 | 14 | 86 | 6 |