மேற்குவங்க தலைமைச் செயலர், டிஜிபியுடன் மத்திய செயலர் ஆலோசனை
மேற்குவங்க தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவருடன், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
மேற்குவங்க தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவருடன், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
மேற்குவங்கத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்ற கார் மீது டிசம்பர் 10ஆம் தேதி கல்வீசி தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறைக்கு மாநில தலைமைச் செயலர் விரிவான அறிக்கை சமர்பித்திருந்தார்.
இந்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக மேற்குவங்க தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவருடன், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.