முகப்பு
தற்போதைய செய்திகள்

புரெவி புயல் பாதிப்பு: டிச.28-ல் தமிழகம் வருகிறது மத்தியக் குழு

புரெவி புயலால ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய, டிசம்பர் 28ஆம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகின்றது.

Updated On : 24 டிசம்பர், 2020 at 7:11 PM
புரெவி புயலால் வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு
பகிர்:

புரெவி புயலால ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய, டிசம்பர் 28ஆம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகின்றது.

வங்கக் கடலில் டிச. 1 ஆம் தேதி உருவான காற்றழுத்ததாழ்வு நிலை, ‘புரெவி’ புயலாக உருவானதையடுத்து தென்தமிழக மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.

இதில், தென்தமிழக மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியும், காற்று வீசியதாலும் பாதிக்கப்பட்டது.  

Advertisement

இதையடுத்து தமிழக அரசு சார்பில் சேதம் குறித்து மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது மத்தியக் குழு ஆய்வு செய்வதற்காக டிசம்பர் 28ஆம் தேதி வருகின்றது.

இதற்குமுன், டிசம்பர் 7ஆம் தேதி நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.