தற்போதைய செய்திகள்

அமெரிக்‍காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்‍திவாய்ந்த நிலநடுக்‍கம்

DIN



அமெரிக்‍காவின் அலாஸ்கா மாகாணத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்‍காவில் உள்ள அலாஸ்கா சிக்னிக்கில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 17 கிலோ மீட்டர் ஆழத்தில், அலாஸ்காவின் தெற்கு கடற்கரை நகரமான சிக்னிக்கில் இருந்து 105 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனால் அமெரிக்க தேசிய டி-சுனாமி எச்சரிக்கை மையம் அலாஸ்கா கடற்கரையின் தெற்குப்பகுதி, அலெயுடியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது.

அலாஸ்கா தீபகற்பத்தில் உடனடியாக எந்தவொரு சேதமும் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை.

1964 ஆம் ஆண்டு அலாஸ்கா-அலுடியன் அகழி என்று அழைக்கப்படும் இடத்தில் 9.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தற்போது  7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது உலகளவில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக உள்ளது. 

அமெரிக்காவில் அலாஸ்கா மிகவும் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக உள்ளது. அலாஸ்காவில் ஜனவரி 1 முதல் சுமார் 25,000 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT