முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹார்விபட்டியில் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பரங்குன்றத்தை அடுத்த  ஹார்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி மக்கள் நல மன்றம் சார்பில் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
ஹார்விபட்டியில் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு
பகிர்:

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பரங்குன்றத்தை அடுத்த  ஹார்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி மக்கள் நல மன்றம் சார்பில் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஹர்விபட்டி பூங்கா அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  திருவுருவப் படத்திற்கு மன்ற தலைவர்  ஜி.அய்யல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மன்ற பொருளாளர் எஸ்.அண்ணாமலை, மன்ற துணைத் தலைவர் ஜி.காளிதாசன், மன்ற செயலாளர் டி.குலசேகரன், எல்.ஐ.சி எம்.கணேசன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.துளசிதாஸ், கந்தராஜ், மீனாட்சிசுந்தரம், மகுடபதி, வெங்கடசாமி, அ.அரவிந்தன், பிச்சம்  மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.