தற்போதைய செய்திகள்

தில்லியில் மருத்துவமனையாக மாற்றிய விடுதிகளை விடுவித்தனர்

DIN

தில்லியில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தங்கும் விடுதிகளை மருத்துவமனையாக மாற்றினார்கள். தற்போது தொற்றின் வேகம் குறைவதால் விடுதிகளை விடுவிப்பதாக தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சுட்டரில் கூறியிருப்பதாவது, “தில்லியில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தங்கும் விடுதிகளின் படுக்கைகளை மருத்துவமனையாக மாற்றினோம்.

தற்போது தொற்றின் வேகம் குறைந்த நிலையில் பல விடுதிகளில் படுக்கைகள் கடந்த சில நாள்களாக காலியாக உள்ளன. இதை நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டேன். அதனால் விடுதிகளின் படுக்கைகளை விடுவிக்கிறேன்” என கூறியிருந்தார்.

தில்லி சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனைகளில் 12633 படுக்கைகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 4700 படுக்கைகளும் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை நிலவரப்படி தில்லியில் கரோனா தொற்றால் 10887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT