முகப்பு
தற்போதைய செய்திகள்

வாகன சோதனையில் சிக்கிய அமமுக பெண் பிரமுகர் கைது: 4 கிலோ கஞ்சா, போலி அடையாள அட்டைகள் பறிமுதல்

கோவையில் காவலர்கள் நடத்திய வாகன சோதனையின் போது காரில் கஞ்சா வைத்திருந்த அமமுக பெண் நிர்வாகியை காவலர்கள் கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

கோவையில் காவலர்கள் நடத்திய வாகன சோதனையின் போது காரில் கஞ்சா வைத்திருந்த அமமுக பெண் நிர்வாகியை காவலர்கள் கைது செய்தனர்.

கோவை வடவள்ளி அருகே காவலர்கள்புதன்கிழமையன்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூரில் இருந்து பெண் ஒருவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரின் பின் பகுதியில் 4 கிலோ கஞ்சா, போதை ஊசிகள், வருமான வரித்துறை அதிகாரி போன்ற போலி அடையாள அட்டை உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து  காவலர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், திருப்பூர் நம்பியாம்பாளயத்தைச் சேர்ந்த அமமுக பெண் பிரமுகர் ஜெயமணி(39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து வடவள்ளி காவலர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →