முகப்பு
தற்போதைய செய்திகள்

கம்பம் பூங்கா திடலில் காய்கறி கடைகள்: சமூக இடைவெளி கடைபிடிக்காததால் கரோனா அபாயம்

தேனி மாவட்டம் கம்பம் பூங்கா திடலில் உழவர் சந்தையை இடம் மாற்றியும், சாலையோர வியாபாரிகள் இடம் மாற்றாமல் இருப்பதால், கரோனா தொற்று அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பூங்கா திடலில் உழவர் சந்தையை இடம் மாற்றியும், சாலையோர வியாபாரிகள் இடம் மாற்றாமல் இருப்பதால், கரோனா தொற்று அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கம்பத்தில் உழவர் சந்தை இடம் மாற்றப்பட்டு, ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் உழவர் சந்தை அருகே சாலையோர வியாபாரிகள் இடம் மாற்றம் செய்யவில்லை, இதனால் காலை நேரங்களில், கூட்டம் சமூக இடைவெளி இல்லாமல் அலை மோதுகிறது. முககவசம் அணிவது இல்லை. சாலையோர காய்கனி கடைகளும் சமூக இடைவெளி இல்லாமல், நெருக்கமாக அமைத்து உள்ளனர். தேனி மாவட்ட நிர்வாகம் தொற்று பரவும் அபாயத்தை களைய சாலையோர காய்கனி கடை வியாபாரிகளை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →