முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகாசியில் நீதிபதி முன்பு மயங்கி விழுந்த கைதி சாவு

சிவகாசியில் சிறையில் அடைக்க நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கைதி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
கோப்புப்படம்
பகிர்:


சிவகாசியில் சிறையில் அடைக்க நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கைதி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் வியாழக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முஸ்லீம் வடக்குத்தெரு சம்சுதீன் மகன் ஷேக் அப்துல்லாஹ் (57) எனவும் அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது வந்தது.

இதுகுறித்து சிவகாசி நகர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்க உடல் தகுதி பெற்றவர் என சான்று பெற்று இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு உள்ள நீதிபதி குடியிருப்புக்கு காவர்கள் அவரை அழைத்துச் சென்றனர். அவரை சிவகாசி குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி எஸ் கல்யாண மாரிமுத்து முன்னிலையில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.20 மணிக்கு ஆஜர்படுத்தினர். அப்போது சேக் அப்துல்லா எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார். தொடர்ந்து அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு 10.45 மணிக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்தவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

அவருக்கு ஏற்கனவே நெஞ்சு வலி வருவதுண்டு மேலும் சர்க்கரை வியாதியும் இருந்துள்ளதால் சேக் அப்துல்லா நெஞ்சுவலியால் இறந்திருக்கலாம் என காவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →