தற்போதைய செய்திகள்

சீர்காழியில் பாரதி தெரு பயன்பாட்டிற்கு திறப்பு: தெருவாசிகள் வரவேற்பு

DIN


சீர்காழி: சீர்காழி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் பின்புறம் உள்ள பகுதியில் பல குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சென்று வர பல ஆண்டுகளாக யூனியன் வளாகம் வழியை பயன்படுத்தி வந்தனர். போதிய போக்குவரத்து வழி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து சீர்காழி எம்எல்ஏ பி வி.பாரதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து எம்எல்ஏ பாரதி உரிய தனி பாதை அமைத்திட அரசு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து திட்டை சாலை வழியாக குடியிருப்பு வாசிகள் சென்று வர சிமென்ட் சாலையுடன் புதிய பாதை( தெரு)  அமைத்து  பாரதி தெரு என பெயரிடப்பட்டது. 

புதிய பாரதி தெரு திறப்பு விழா மற்றும் நகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சீர்காழி ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் , நகராட்சி பொறியாளர் வசந்தன், ஒன்றிய பொறியாளர் தாரா முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ பாரதி புதிய தெரு பெயர் பலகையை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு  அளித்தார். 

தொடர்ந்து தெருவாசிகள் மகாலிங்கம் தலைமையில் எம்எல்ஏ க்கு பாராட்டு நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடந்தது. இதில் அதிமுக நகர செயலாளர் பக்கிரிசாமி,  ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், பேரூர் கழக செயலாளர் போகர். ரவி, ஜெ.பேரவை செயலாளர் மணி , ஒன்றிய எம் ஜிஆர்  இளைஞர் மன்ற செயலாளர் திருமாறன், வக்கீல்கள் மணிவண்ணன், நெடுஞ்செழியன், ரோட்டரி துணை ஆளுநர் சாமி.செழியன், முன்னாள் துணை ஆளுநர் சுசீந்திரன், ஆசிரியர் கோவி.நடராஜன், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி ஆண்டு விழா

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

SCROLL FOR NEXT