தற்போதைய செய்திகள்

உலகளவில் கரோனா பாதிப்பு 89.22 லட்சத்தை கடந்தது!

DIN


உலகளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 89 லட்சத்து 22 ஆயிரத்து 027-க்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் கண்டறியப்பட்ட கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் புதிதாக 13,573 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்தை அடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 89,22,027 ஆகவும், புதிதாக 601 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,66,867 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 47,43,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 36,57,123 பேர்களில் 54,505 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. 

அமெரிக்காவில் அதிகபட்சமாக 23,30,578 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,21,980 பேர் பலியாகியுள்ளனர். 972,941 குணமடைந்துள்ளனர், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 12,35,657 பேர்களில் 16,529 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 10,70,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 50,058    இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் 5,76,952 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3,95,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,281 பேர் பலியாகியுள்ளனர் என  புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT