முகப்பு
தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் அருகே மீனவர் கொலை: மனைவி, மகன் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குடிபோதையில் குடும்பத்தாரிடையே தகராறு செய்த மீனவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.

Updated On : 22 ஜூன், 2020 at 1:37 PM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குடிபோதையில் குடும்பத்தாரிடையே தகராறு செய்த மீனவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலை செய்யப்பட்டவரின் மனைவி மற்றும் மகன் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். வேதாரண்யத்தை அடுத்துள்ளது சிறுதலைக்காடு மீனவ கிராமம். இங்கு வசித்தவர் மா.சிவசுந்தரம் (55) மீனவர். இவரது 3-ஆவது மனைவி அங்காளம்மை (45). இவர்களுக்கு 3 மகன் 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

குடிபழக்கமுள்ள சிவசுந்தரம் அடிக்கடி குடும்பத்தாரிடையே தகராறில் ஈடுபடுவாராம். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தனித்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை குடிபோதையில் வந்த சிவசுந்தரம் மனைவி மகன்களிடம் தகராறு செய்தாராம். இதையடுத்து அவரை வீட்டுக்குள் கட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

பின்னர், துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை கிராமத்தினர் மூலம் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்று வாய்மேடு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி அங்காளம்மை, 2 -ஆவது மகன் ஞானபிரகாசம் (25) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.