தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே கடற்கரை பகுதியில் ஒதுங்கிய பல கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் மீட்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.புதுப்பேட்டை கடற்கரையில், கடலில் இருந்து கரை ஒதுங்கிய சீன மொழியில் எழுதப்பட்டுள்ள போதை பொருள்களை காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

DIN

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.புதுப்பேட்டை கடற்கரையில், கடலில் இருந்து கரை ஒதுங்கிய சீன மொழியில் எழுதப்பட்டுள்ள போதை பொருள்களை காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை வட்டம்  சி புதுப்பேட்டை கடற்கரைப் பகுதியில், கடலில் அடித்து வந்து கரை ஒதுங்கி பல கோடி மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள 4 பாக்கெட்டுகள் போதைப்பொருள்களை பரங்கிப்பேட்டை காவல்துறையினர் கைப்பற்றினர். 

மேலும் இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பரங்கிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சமீபத்தில் மாமல்லபுரம் கொக்கிலிமேடு கடற்கரைப்பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் போல் பரங்கிப்பேட்டை சி புதுப்பேட்டை கடற்கரைப் பகுதியிலும் போதைப் பொருள்கள் கடை ஒதுங்கியுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT