நாகூர் அருகே பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை
நாகூர் அருகே பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாகூர் அருகே பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாகை அடுத்த மேல வாஞ்சூரில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வருபவர் செந்தில்(42). நரிமனம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர், செவ்வாய்க்கிழமை காலை கடையைத் திறக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். நாகூர் கங்களாஞ்சேரி சாலை பூதங்குடி ஐ.ஓ.சி அருகே சென்று கொண்டிருந்தபோது முள்புதர்களில் மறைந்திருந்த மர்ம கும்பல், செந்திலின் இருசக்கர வாகனத்தை மறித்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளது.
Advertisement
Advertisement
இதில் பலத்தக் காயமடைந்த செந்தில் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்து வந்த நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.