முகப்பு
தற்போதைய செய்திகள்

நிவாரணம் வழங்கக்கோரி பம்பை உடுக்கை இசைக் கலைஞர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

சேலத்தில் பொது முடக்க உத்தரவால் வாழ்வாதரம் இழந்து தவிக்கும் பம்பை உடுக்கை இசைக் கலைஞர்கள் நிவாரணம் வழங்கக்கோரி பம்பை இசை வாசித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

சேலத்தில் பொது முடக்க உத்தரவால் வாழ்வாதரம் இழந்து தவிக்கும் பம்பை உடுக்கை இசைக் கலைஞர்கள் நிவாரணம் வழங்கக்கோரி பம்பை இசை வாசித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் கோவில்கள் திருவிழாக்கள் அனைத்தும் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பம்பை உடுக்கை இசைக்கலைஞர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பம்பை உடுக்கை இசைக்கலைஞர்கள் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இசைக் கலைஞர்களுக்கு வட்டியில்லா கடன் உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு வழங்க வந்தனர். அப்பொழுது இசைக்கலைஞர்கள் பம்பை அடித்து இசை முழங்க தங்களின் கோரிக்கைகளை நூதன முறையில் வெளிப்படுத்தினர்.

மேலும் இசைக்கலைஞர்கள் கூறுகையில் இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக கோயில்களில் திருவிழா உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நாங்கள் இந்த திருவிழா காலத்தில் சம்பாதிக்கும் தொகையை வைத்துதான் ஒரு வருட காலத்திற்கு எங்களுடைய வாழ்வாதாரத்தை வாழ்ந்து வருகிறோம். 

இந்த மூன்று மாத பொது முடக்க உத்தரவு காரணத்தினால் எங்களுடைய குடும்பம் தற்போது அன்றாட உணவிற்கே அல்லல்படும் சூழ்நிலை உருவாகி 
உள்ளது. ஒரு பால் பாக்கெட் வாங்க கூட தற்போது பணம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே தமிழக அரசு உடனடியாக இசை கலைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →