ஆக்ராவில் கரோனா பலி எண்ணிக்கை 31 -ஆக உயர்வு
ஆக்ராவில் கரோனா தொற்று பாதித்தவர்களில் மேலும் 2 பேர் பலியாகியுள்ளன. இதையடுத்து பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
ஆக்ரா: ஆக்ராவில் கரோனா தொற்று பாதித்தவர்களில் மேலும் 2 பேர் பலியாகியுள்ளன. இதையடுத்து பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஆக்ரா மாவட்ட ஆட்சியர் பி.என்.சிங் கூறுகையில், தொற்று பாதித்தவர்களில் 722 சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், அதே நேரத்தில் 98 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சனிக்கிழமை இரவு வரை புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாவட்டத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 851 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கடந்த எட்டு நாள்களில் தினசரி புதிய தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களில் இல்லை என்றாலும், மே 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் மனநிலையில் மாவட்ட நிர்வாகம் இல்லை. எம்ஜி சாலையில் பொது பயன்பாடு அதிகரித்துள்ளதால், கட்டுப்பாட்டு மண்டலங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.