முகப்பு
தற்போதைய செய்திகள்

மணப்பாறை அருகே மேய்ச்சலில் இருந்த 5 ஆடுகள் இடி விழுந்த அதிர்ச்சியில் உயிரிழப்பு

மணப்பாறை அருகே மேய்ச்சலில் இருந்த 5 ஆடுகள் இடி விழுந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தன.  இடி விழுந்த அதிர்ச்சியில் 5 ஆடுகள் உயிரிழப்பு

Updated On : 6 நவம்பர், 2020 at 4:48 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:18 PM


மணப்பாறை அருகே மேய்ச்சலில் இருந்த 5 ஆடுகள் இடி விழுந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தன. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கை தொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருளப்பன் பொய்கைமலை அடிவாரத்தில் குடிசையிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி ஜெயமேரி(64),  கால்நடைகளைவளர்த்து வந்துள்ளார். 

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் இடி மின்னலுடம் அப்பகுதியில் மழை பெய்துள்ளது. அப்போது இடி ஒன்று பலத்த சத்தத்துடன் ஜெயமேரி வீட்டின் அருகே விழுந்ததாம். இடி விழுந்த அதிர்ச்சியில் வீட்டின் அருகே மேய்ச்சலில் இருந்த 2 சினை ஆடுகள் உள்ளிட்ட 5 ஆடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதனைக்கண்ட ஜெயமேரி கதறி அழுதுள்ளார். 

Advertisement

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற ஊராட்சி மன்றத்தலைவர் ரோஸிலின் சகாயமேரி ராஜசேகர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த 5 ஆடுகளும் கால்நடை மருத்துவரின் உடற்கூராய்விற்கு பின்னர் ஜெயமேரி தோட்டத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.