முகப்பு
திருத்தணியில் அனுமதியின்றி வேல் யாத்திரையை தொடங்கிவைத்து பேசும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன்
தற்போதைய செய்திகள்

திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கிய பாஜக தலைவர் எல். முருகன், முக்கிய தலைவர்கள் கைது

திருத்தணியில் அனுமதியின்றி வேல் யாத்திரையை தொடங்கிய மாநில பாஜக தலைவர் எல்.முருகன், முக்கிய தலைவர்கள் உள்பட 500 பேரை காவலர்கள் கைது செய்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
திருத்தணியில் அனுமதியின்றி வேல் யாத்திரையை தொடங்கிவைத்து பேசும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன்
பகிர்:

திருத்தணியில் அனுமதியின்றி வேல் யாத்திரையை தொடங்கிய மாநில பாஜக தலைவர் எல்.முருகன், முக்கிய தலைவர்கள் உள்பட 500 பேரை காவலர்கள் கைது செய்தனர். 

மாநில பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தணி முருகன் கோவிலிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோவில் வரை டிசம்பர் 6 வரை வெற்றி வேல் யாத்திரை மேற்கொள்ப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும், திட்டமிட்டப்படி யாத்திரை தொடங்கப்படும் என்று பாஜக அறிவித்துவிட்டு அதற்கான ஏற்பாடுகளில் ஆர்வம் காட்டினர். வேல் யாத்திரை தொடக்க விழாவில் கலந்துக்கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பாஜகவினர் திருத்தணியில் குவிந்தனர். 

திருத்தணியில் அனுமதியின்றி வேல் யாத்திரையை தொடங்கிய மாநில பாஜக தலைவர் எல்.முருகன், முக்கிய தலைவர்களை காவலர்கள் கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.

பாஜகவினர் யாத்திரை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் திருவள்ளூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்கலிருந்து 1400க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் நகர் முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பகல் 12 மணி அளவில்  தடையை மீறி சிறப்பு வாகனத்தில் திருத்தணிக்கு வந்த எல்.முருகன் மலைக் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்கினார். 

வேல் யாத்திரைக்கு வந்த பாஜகவினர்.

பின்னர், சென்னை புறநகர் சாலைக்கு வந்து வெற்றி வேல் யாத்திரை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து அக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, உள்பட முக்கிய நிர்வாகிகள் தலைவர்கள் யாத்திரையை வாழ்த்தி பேசினர். 

அனுமதியின்றி யாத்திரை தொடங்கிய மாநில தலைவர் எல்.முருகன், முக்கிய தலைவர்கள் உள்பட 500க்கும் மேற்ப்பட்டோரை காவலர்கள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

திருத்தணி புறநகர் சாலையில் வேல் யாத்திரை தொடங்கி வைத்த எல்,முருகன் பேசுகையில், இந்து மதத்திற்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாட்டை  மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவே வேல் யாத்தியை நடத்தப்படுவதாகவும், திருத்தணி முருகன் சன்னதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ள யாத்திரை டிசம்பர் 6 இல் திருச்செந்தூரில் மிகப் பெரிய எழுச்சி பெற்று தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்  2021 ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆதரவுடன் ஆட்சி மலரும், மு.க.ஸ்டாலின் முதல்வர் கனவு  கனவாகவே மாறும் என்று முருகன் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →