மேற்குவங்க புறநகர் ரயில் சேவை: சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்
மேற்கு வங்கத்தில் 8 மாத கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மக்கள் செல்வதால் கரோனா பரவல் அச்சுறுத்தல் எற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 8 மாத கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மக்கள் செல்வதால் கரோனா பரவல் அச்சுறுத்தல் எற்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 696 புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன. எனினும் தொற்று அபாயத்தால் ரயில்களில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை இயக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளி இல்லாமலும், ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் செய்தனர்.
இதனால், கரோனா வேகமாக பரவும் சூழல் உருவாகியுள்ளது.