முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் நியமனம்

அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அஇஅதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
பகிர்:

அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அஇஅதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. கே.பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,

அஇஅதிமுகவின் கழக அமைப்புச் செயலாளராக எம்.எஸ்.எம்.ஆனந்தன், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளராக ஆர்.கமலக்கண்ணன் மற்றும் இணைச் செயலாளராக சி.கே.துளசிதாஸ் ஆகியோரை நியமித்துள்ளனர்.

மேலும், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின் செயலாளராக கா.சங்கரதாஸ் மற்றும் இணைச் செயலாளராக எ.நூர்ஜஹான், கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்களாக சி.திருமாறன் மற்றும் எஸ்.செல்வகுமார் ஆகியோரை அறிவித்துள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →