சந்திரசேகர் ராவ் 
தற்போதைய செய்திகள்

‘பாஜக அரசிற்கு எதிரான கட்சிகளை அணி திரட்டுவேன்’: சந்திரசேகர் ராவ்

பாஜக அரசிற்கு எதிரான கட்சிகளை அணி திரட்டுவேன் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ANI

பாஜக அரசிற்கு எதிரான கட்சிகளை அணி திரட்டுவேன் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய சந்திரசேகர் ராவ் கூறியதாவது:

“ரயில் நிலையத்தில் நான் தேநீர் விற்றேன் என கூறிய மோடி தற்போது ரயில் நிலையத்தை விற்கின்றார். பொதுப் பணித்துறைகளின் பங்குகளை விற்பது மற்றும் ரயில்வே துறையை தனியார்மையமாக்குவது போன்றவற்றை மத்திய அரசு செய்து வருகின்றது. தற்போது அதற்கான அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்தியாவில் பாஜகவிற்கு எதிராக உள்ள அனைத்து கட்சித் தலைவர்களிடமும் பேசி, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஹைதராபாத்தில் எதிர் கட்சிகளின் மாநாட்டை நடத்துவேன்.

மோடி அரசிற்கு எதிராக அணி திரண்டு நிற்க, தெலுங்கானா ராஷ்டிர சமிதி போராடும்” என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT