முகப்பு
தற்போதைய செய்திகள்

வடமேற்கு பாகிஸ்தானில் மழையால் 10 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் பெய்து வரும் மழையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 20 பேர் காயமடைந்துள்ளனர் என புதன்கிழமை பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
10 people die in rain-related incidents in northwest Pakistan
பகிர்:

வடமேற்கு பாகிஸ்தானில் பெய்து வரும் மழையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 20 பேர் காயமடைந்துள்ளனர் என புதன்கிழமை பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரி கூறுகையில், 

ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை பேரிடர் மேலாண்மைக் குழுவினர்கள் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

வெள்ளத்தால் இதுவரை ஸ்வாட் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலியாகியுள்ளனர், அதில் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 2 பேரின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பாலகோட் பகுதியில் வெள்ளத்தில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும், மன்சேராவின் ஓகி பகுதியில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கைபர் பக்துன்க்வாவில் மழை தொடர்பான சம்பவங்களில் 4 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 46 வீடுகள் சேதமடைந்துள்ளது என பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →