முகப்பு
தற்போதைய செய்திகள்

வங்கதேச மசூதியில் ஏசி வெடித்து விபத்து: 12 பேர் பலி, 25 பேர் காயம்

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு மசூதியில் 6 குளிர்சாதனம் வெடித்ததில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பலியாகினர், 25 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
வங்கதேச மசூதியில் ஏசி வெடித்து விபத்து: 12 பேர் பலி, 25 பேர் காயம் (கோப்புப்படம்)
பகிர்:

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு மசூதியில் 6 குளிர்சாதனம் வெடித்ததில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பலியாகினர், 25 பேர் காயமடைந்துள்ளனர்.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் நாராயங்கஞ்ச் நதி துறைமுக பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் குளிர்சாதனம் வெடித்துள்ளது.

இதுகுறித்து நாராயங்கஞ்ச் தீயணைப்பு சேவை அதிகாரி அப்துல்லா அல் அரேஃபின் டாக்கா ட்ரிப்யூன் கூறுகையில், மசூதிக்கு அடியில் டைட்டாஸ் வாயுவின் குழாய் செல்கிறது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் குழாயில் இருந்து கசிந்த வாயுவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்.

அப்போது குளிர்சாதனத்தை யாரேனும் அணைக்கவோ இயக்கவோ செய்யும் போது விபத்து நடந்திருக்கலாம் என கூறினார்.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 25 பேர் 90 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளனர் என மருத்துவர் சமந்தா லால் தெரிவித்தார்.

மேலும், விபத்து குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.