தென்காசியில் பெண்ணை கட்டிப்போட்டு 80 சவரன் நகை கொள்ளை
தென்காசியில் பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் பெண்ணை கட்டிப்போட்டு 80 சவரன் நகைகளை திங்கள்கிழமை கொள்ளையடித்து சென்றனர்.
தென்காசி: தென்காசியில் பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் பெண்ணை கட்டிப்போட்டு 80 சவரன் நகைகளை திங்கள்கிழமை கொள்ளையடித்து சென்றனர்.
தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் பிரதான சாலையில் வசித்து வருபவர் ஜெயபால். இவர் மரஅறுவை ஆலை அதிபர் ஆவார். இவருடைய மனைவி விஜயலட்சுமி.
இன்று நண்பகல் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள்புகுந்து விஜயலட்சுமியை கட்டிப்போட்டு விட்டு வீட்டிலிருந்த 80 சவரன் தங்க நகைகள் ரூபாய் 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் கைரேகை நிபுணர்களும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.