முகப்பு
தற்போதைய செய்திகள்

உ.பி.யில் பேருந்து விபத்து : 2 பேர் பலி, 10 பேர் காயம்

உத்தரபிரதேசத்தின் ராம்சனேஹி காட் பகுதியில் செவ்வாய்க்கிழமை வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 22 செப்டம்பர், 2020 at 3:50 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:54 PM

உத்தரபிரதேசத்தின் ராம்சனேஹி காட் பகுதியில் செவ்வாய்க்கிழமை வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பிகாரில் இருந்து பஞ்சாபிற்கு தொழிலாளர்களை ஏற்றி வந்த டெம்போ வேன் அயோத்தி-லக்னோ நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணியளவில் ஒரு உணவகத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், அயோத்தியில் இருந்து வந்த பேருந்து வேனின் பின் பகுதியில் மோதியது. இதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், அம்ரி தேவி மற்றும் ஜோகி பிண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.