முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளம், அசாம், மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவு நிறைவு

கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் நடைபெற்றது. மாலை 6 மணிமுதல் 7 மணிவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களித்த பின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

தற்போதைய நிலவரப்படி அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக 82.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கேரளம்:

கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றது. மாலை 6 மணி நிலவரப்படி, 69.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அசாம்:

அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் இறுதி கட்டத்தில் மாலை 6.30 மணி நிலவரப்படி 82.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்குவங்கம்:

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் 3ஆம் கட்டத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 77.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →