தற்போதைய செய்திகள்

வாக்களிக்க வரும் பெண்களை தாக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள்: மம்தா குற்றச்சாட்டு

ANI

மேற்கு வங்கத்தில் வாக்களிக்க செல்லும் பெண்கள், பொதுமக்களை மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் தாக்குவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது சிஆர்பிஎஃப் வீரர்கள் வாக்களிக்க வந்தவர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கூச் பெஹாரில் மம்தா பேசியதாவது,

சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்புகளை நாங்கள் விரும்புகிறோம், பொதுமக்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். சிஆர்பிஎஃப் வீரர்கள் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைவதைத் தடுக்கக்கூடாது.

உண்மையான வீரர்கள் இருக்கும் சிஆர்பிஎஃபை நான் மதிக்கிறேன், ஆனால் தொல்லை செய்கிற, பெண்களைத் தாக்கும் மற்றும் மக்களைத் துன்புறுத்தும் பாஜகவின் சிஆர்பிஎஃபை நான் மதிக்கமாட்டேன் எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT