மகாராஷ்டிரம் மருத்துவமனை தீ விபத்து: தலைமை நிர்வாக அதிகாரி கைது
மகாராஷ்டிரத்தில் தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள விஜய் வல்லாப் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய 15 கரோனா நோயாளிகள் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
Advertisement
இந்நிலையில், அந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை ஒருநாள் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.