முகப்பு
உ.பி.யில் கரோனாவால் பலியான மனைவி: தகனம் செய்ய முடியாமல் தவித்த முதியவர்(படம்: டிவிட்டர்)
தற்போதைய செய்திகள்

உ.பி.யில் கரோனாவால் பலியான மனைவி: தகனம் செய்ய முடியாமல் தவித்த முதியவர்

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் உதவ முன்வராததால் அவரது கணவர் தவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
உ.பி.யில் கரோனாவால் பலியான மனைவி: தகனம் செய்ய முடியாமல் தவித்த முதியவர்(படம்: டிவிட்டர்)
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் உதவ முன்வராததால் அவரது கணவர் தவித்துள்ளார்.

ஜாவுன்புர் அருகே உள்ள ஓர் கிராமத்தில் வசிப்பவர் திலக்தாரி சிங். இவரது மனைவி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் கரோனா அச்சத்தால் மனைவியின் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் உதவ முன்வர மறுத்துள்ளனர்.

இதையடுத்து தனது மிதிவண்டியில் மனைவியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முயன்ற முதியவரால் முடியாததால் சாலையிலேயே உடலை வைத்து அழுதுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முதியவருக்கு உதவி செய்து உடலை தகனம் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →