நாட்டில் 7.86 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் இதுவரை 7.86 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 7.86 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கின. முதல் 4 நாள்களில் நாடு முழுவதும் 6,31,417 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நான்காவது நாள் மாலை 6 மணிவரை நிலவரப்படி 1,55,425 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
நாட்டில் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 7,86,842 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி போட்டவர்களில் தீவிர பக்கவிளைவுகள் யாருக்கும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.