முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக மீனவர்கள் உயிரிழப்பு: மத்திய அரசு கண்டனம்

இலங்கை கடற்படை தாக்குதலில் நான்கு தமிழக உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
மீனவர்களின் சடலங்களை மீட்கும் மீட்புப்படை.
பகிர்:

இலங்கை கடற்படை தாக்குதலில் நான்கு தமிழக உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18.1.2021அன்று மீன் பிடிப்பதற்காக தங்கச்சிமடத்தைச் சேர்ந்த  ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மெசியா, நாகராஜ், செந்தில்குமார் மற்றும் சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றனர்.

இம்மீனவர்கள் 19.1.2021 அன்றே கரைக்கு திரும்பி இருக்கவேண்டும். அவர்கள் கரைக்குத் திரும்பாததால், இந்திய கடலோர காவல் படையின் ஒரு கப்பல், இந்திய கப்பல் படையைச் சேர்ந்த ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது.

இதில் 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலினால் இறந்துவிட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

இலங்கை கடற்படையின் கப்பல் மோதி 4 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய துணை தூதரகம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்திடமும் மத்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் இலங்கை கையாள வேண்டும்.  மீனவர் தொடர்பான உடன்படுக்கையை இரு நாடுகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →