தற்போதைய செய்திகள்

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!   

DIN


புதுதில்லி: வடமேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடமேற்கு வங்கக் கடலில் நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி முன்கூட்டியே உருவாகியுள்ளது. 

காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.  வடமேற்கு, வட தில்லி, ஜிந்த், ரோஹ்தக், கைதால், ரேவாரி, பவல், திசாரா, கஸ்கஞ்ச், பரத்பூர், நாட்பாய், பர்சனா போன்ற பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான கனமழை பெய்யக்கூடும்.  

பெருமழையால் ஏற்கனவே மும்பை பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் மகாராஷ்டிரம் மாநிலத்திற்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT