தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 2,382 பேருக்கு கருப்புப் பூஞ்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் இதுவரை 2,382 பேர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா ஆய்வின்போது இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது,

தமிழக மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளதால், தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

மாநிலத்தில் கருப்புப் பூஞ்சையால் இதுவரை 2382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 111 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்கள் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT