முகப்பு
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் வியாழக்கிழமை அறிவித்தார்.

Updated On : 25 மார்ச், 2021 at 6:11 PM
பகிர்:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் வியாழக்கிழமை அறிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இரு அவைகளின் தலைவர்களும் இன்று அறிவித்தனர்.

Advertisement

இந்த கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தில்லி ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா, காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.