தற்போதைய செய்திகள்

மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்டும் கொடுக்காதது ஏன்? தில்லி உயர்நீதிமன்றம் கேள்வி

ANI

தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலியான நிலையில், ஆக்ஸிஜன் ஒதுக்கபட்டும் உரிய நேரத்தில் ஏன் கொடுக்கவில்லை என மத்திய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லி முழுவதும் நாள்தோறும் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகி வருகிறது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்நிலையில், தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 8 கரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறியது, பிற்பகல் 12 மணிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. அதன்பிறகு ஒரு மணிநேரம் கழித்துதான் ஆக்ஸிஜன் கிடைத்தது. உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் வராததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்டும் உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கொடுக்காதது ஏன் என மத்திய அரசிடம் கேட்டுள்ளனர்.

மேலும், மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT