பிகாரில் மே 25 வரை ஊரடங்கு நீட்டிப்பு
அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிகார் மாநிலத்தில் மே 25 வரை பொதுமுடக்க கட்டுப்பாடுகளை நீட்டித்து அறிவித்துள்ளனர்.
அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிகார் மாநிலத்தில் மே 25 வரை பொதுமுடக்க கட்டுப்பாடுகளை நீட்டித்து அறிவித்துள்ளனர்.
பிகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பொதுமுடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மே 25ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நிதீஸ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மே 15ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.