முகப்பு
தற்போதைய செய்திகள்

தி பேம்லி மேன் 2 தொடரை தடை செய்க: பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக அரசு கடிதம்

தி பேம்லி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 24 மே, 2021 at 9:14 PM
பகிர்:

தி பேம்லி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

தி பேம்லி மேன் 2 தொடரின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியானது. அதில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து மனோ தங்கராஜ் எழுதியுள்ள கடிதத்தில்,

Advertisement

ஈழத்தமிழர் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் தி பேம்லி மேன் 2 தொடரின் முன்னோட்டம் உள்ளது. இந்த தொடர் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொடர் ஒளிபரப்பானால் மாநிலத்தில் மதநல்லிணக்கத்தை காப்பது கடினமாகிவிடும். ஆகையால் தி பேம்லி மேன் 2 தொடரை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நிறுத்தவோ, தடை செய்யவோ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.