தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தில் முதல்வர் ஆய்வு

DIN

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ரூ.750 கோடி மத்திப்பில் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் கட்டப்பட்டது.

ஆனால், கட்டப்பட்டு 9 ஆண்டுகளாக செயல்படாத அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.

முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை சந்தித்து திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு, ஆலையை திறந்து தடுப்பூசி உற்பத்தி தொடங்குமாறு கடிதம் வழங்கினார்.

அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டு, இந்த ஆலையை புனரமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் இது குறித்து மத்திய அரசு உரிய முடிவை வெளியிடும் எனவும் மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் உறுதியளித்தாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT