முகப்பு
தற்போதைய செய்திகள்

போச்சம்பள்ளி அருகே நீரில் மூழ்கி தந்தை, மகன் சாவு

போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் பொழுது, நீரில் மூழ்கி தந்தை, மகன் இருவரும் பலியான சம்பவம் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
பகிர்:

போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் பொழுது, நீரில் மூழ்கி தந்தை, மகன் இருவரும் பலியான சம்பவம் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). இவர் தனது மகன் கிருபா (12)-க்கு அங்குள்ள விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுக்  கொடுத்துக்  கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராமல் இருவரும் நீரில் மூழ்கினர்.

தகவலறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று  35 அடி தண்ணீர்  உள்ள விவசாய கிணற்றில் இருந்து  பெரியசாமி, கிருபா ஆகிய இருவரையும்  சடலமாக மீட்டனர் சடலங்களை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

முழு கட்டுரையைப் படிக்க →