முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்ககிரி பேரூராட்சி தேர்தலில் மூன்று சக்கர மடக்கு தள்ளுவண்டியின் செயல்பாட்டால் முதியோர்கள் மகிழ்ச்சி 

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி வார்டு தேர்தல்கள் 31 வாக்குச்சாவடி மையங்களில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

தற்போதைய செய்திகள்

சங்ககிரி பேரூராட்சி தேர்தலில் மூன்று சக்கர மடக்கு தள்ளுவண்டியின் செயல்பாட்டால் முதியோர்கள் மகிழ்ச்சி 

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி வார்டு தேர்தல்கள் 31 வாக்குச்சாவடி மையங்களில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி வார்டு தேர்தல்கள் 31 வாக்குச்சாவடி மையங்களில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. இதில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிக்க வசதியாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் 11 மூன்று சக்கர மடக்கு தள்ளுவண்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமை (இன்று) காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளுக்கான தேர்தலில் 82 பேர் போட்டியிடுகின்றனர். 18 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 13447 பேரும், பெண்கள் 14133 பேரும், மற்றவர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 27582 பேர் வாக்களிக்க உள்ளனர்.  

காலை 7 மணி முதல் 9 மணி வரை பேரூராட்சிக்குள்பட்ட வார்டு தேர்தல்களில் 7.49 பேர் வாக்களித்துள்ளனர்.  வாக்குப்பதிவு தொடங்கியவுடன் வெப்பம் குறைவாக இருந்ததையடுத்து மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அவர்களது வாக்கினை செலுத்த ஆர்வமுடன்  இரு சக்கர வாகனத்தில் உதவியாளர்களுடன் வந்திருந்தனர். தேர்தல் விதிமுறைகளையடுத்து வாகனங்கள் 100 மீட்டருக்கு முன்னால் நிறுத்த காவல்துறையினர் அறிவுறுத்தினர். 

அதனையடுத்து தயாராக இருந்த பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூன்று சக்கர மடக்கு தள்ளுவண்டிகளுடன் வந்து அவர்களை சாய்வுதளம் மூலம் வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்றனர். காவல்துறையினர் ஒத்துழைத்து விரைவாக முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவினை செலுத்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது முதியோர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  மேற்கு நோக்கி உள்ள இரு வாக்குச்சாவடிகளின் முன் பகுதியில் மணல்  அதிகமாக பரவியிருந்ததையடுத்து முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளை நுழைவுவாயிலிருந்து மூன்று சக்க தள்ளுவண்டியில் அழைத்து சென்று தலைமையாசிரியர் அறை முன்பு வரை மட்டுமே அழைத்து வரப்பட்டனர். 

இதனையடுத்து காவல்துறையினர் உதவியுடன் வாக்குச்சாவடிகளுக்கு அவர்கள் சென்று  வாக்களித்தனர். போதிய வசதிகள் இருந்தும் இரு வாக்குச்சாவடிகளுக்கு முன்பு  மணல் அதிகமாக இருந்ததால் மூன்று சக்கர நாற்காலி வண்டியை தள்ள முடியாமல் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

முழு கட்டுரையைப் படிக்க →