தற்போதைய செய்திகள்

கடலூர்: கடலூர் மாநகராட்சியில் மறுதேர்தல் நடத்தக் கோரி அதிமுக போராட்டம்

DIN

கடலூர் மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்.20 ஆம் தேதி நடந்தது. மொத்தமுள்ள 45 வார்டுகளில் 352 பேர் போட்டியிட்டனர். அதிமுக 45 வார்டுகளிலும், திமுக 35 வார்டுகளிலும் கூட்டணி கட்சியினர் 10 வார்டுகளிலும் போட்டியிட்டனர். 

பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக-6, சுயேட்சை-3, பாமக, பாஜக தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றனர். முன்னதாக, வாக்கு எண்ணிக்கை துவங்கும் போது வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் வைத்திருந்த அறையின் பூட்டுக்கான சாவி காணாமல் போனது. இதனையடுத்து பூட்டு உடைக்கப்பட்டு அதன் பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளியே எடுத்து எண்ணப்பட்டது. 

எனவே, வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கருதி கடலூர் பேருந்து நிலையம் அருகில் அதிமுகவினர் குவிந்தனர். தேர்தலில் போட்டியிட்ட 13 வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டனர். பின்னர், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், முன்னாள் கவுன்சிலர்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கம் எழுப்பினர். துணை கண்காணிப்பாளர் சே.கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதிமுகவினரும் குவிந்து வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT