தம்மம்பட்டி பேரூராட்சி: திமுகவை சேர்ந்த கணவன் - மனைவி வெற்றி
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில் கணவன் மனைவி இருவரும் வென்றுள்ளனர்.
தற்போதைய செய்திகள்தம்மம்பட்டி பேரூராட்சி: திமுகவை சேர்ந்த கணவன் - மனைவி வெற்றி
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில் கணவன் மனைவி இருவரும் வென்றுள்ளனர்.
தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில் கணவன் மனைவி இருவரும் வென்றுள்ளனர்.
தம்மம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி பெண் (பொது) என ஒதுக்கீடு செய்யப்பட்டதால், நகர திமுக செயலாளர் விபிஆர். ராஜா, தனது மனைவி கவிதாவை, 2-வது வார்டில் திமுக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்ததுடன், அவரும் (விபிஆர்ராஜா) 4வது வார்டில் திமுக வேட்பாளராகி, நின்று வென்றார். கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் கவிதா, பேரூராட்சித் தலைவராகிறார். துணைத் தலைவர் பதவிக்கு, கவிதாவைத் தவிர வெற்றி பெற்ற, இதர திமுக கவுன்சிலர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.