முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்பூர் நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக அதிகாரப்பூர்வ நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் ஏஜஸ் அகமது எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
ஆம்பூரில் திமுக நகர்மன்றத் தலைவர் போட்டி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தலை நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள்.
பகிர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக அதிகாரப்பூர்வ நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் ஏஜஸ் அகமது எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் இரண்டு மணி நேரம் தற்காலிகமாக நகர்மன்றத் தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆம்பூரில் திமுக போட்டி நகர்மன்றத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவாக பெரும்பாலான திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்தலை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூரில் திமுக போட்டியிட்ட நகர்மன்றத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவாளர்கள் தேர்தலை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கூறி ஆம்பூர் நகராட்சி நுழைவுவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.