தற்போதைய செய்திகள்

ஹிமாசல பிரதேசம்: உலக நோய்த்தடுப்பு வார விழாவில் 600 குழந்தைகளுக்கு தடுப்பூசி

DIN

சிம்லா: ஹிமாசல பிரதேசத்தில் ஏப்ரல் 24 முதல் 30 வரை அனுசரிக்கப்பட்ட உலக நோய்த்தடுப்பு வாரத்தின் போது சுமார் 600 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக  மாநில அரசு தெரிவித்துள்ளது.

உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் 11 நோய்களுக்கான தடுப்பூசிகள் 16 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு செலுத்தப்பட்டதாக மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இது குறித்து சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் கோபால் பெர்ரியின் தெரிவித்ததாவது:

உலகிலேயே மிகப்பெரிய இந்த நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் 16 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

வழக்கமான தடுப்பூசியுடன், ஒன்பது மாத குழந்தைகளுக்கும் மூன்றாம் டோஸ் ஐபிவி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT