தற்போதைய செய்திகள்

"இந்நாள் வரை இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை" - இளையராஜா

சென்னை ஐஐடியில் இளையராஜாவின் பெயரில் ’இசைகற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’.

DIN

சென்னை ஐஐடியில் இளையராஜாவின் பெயரில் ’மேஸ்ட்ரோ இளையராஜா இசைகற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இளையராஜாவின் பெயரில் ’மேஸ்ட்ரோ இளையராஜா இசைகற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ தொடங்குவதற்கு சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் இசைஞானி இளையராஜாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, ’’இசையைக் கற்றுக் கொள்வதற்காக சென்னை வந்தவர் இன்றளவிலும் கற்றுக் கொள்ளவில்லை. நான் எதுவும் சாதிக்கவில்லை. இசை, என் உயிர் மூச்சைப் போன்றது. இசையமைப்பது எனக்கு மூச்சுவிடுவதைப்போல் இயல்பானது. நன்றாக இசையமைப்பதாக யாரேனும் சொன்னால், நன்றாக சுவாசிக்கிறீர்கள் என்று சொல்வதைப்போல் உள்ளது” என்றார். மேலும், பார்வையாளர்களுடன் சேர்ந்து பாடவும் செய்தார்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

SCROLL FOR NEXT