தற்போதைய செய்திகள்

கௌதம் கம்பீருக்கு தொகை குறிப்பிடாமல் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

ஐபிஎல் தொடரில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கேகேஆர் அணியின் ஆலோசகராக தொடர்வதற்கு கம்பீருக்கு, ஷாருக்கான் தொகை ஏதும் குறிப்பிடாமல் காசோலை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் கௌதம் கம்பீருக்கு, அந்த அணியின் இணை உரிமையாளர் ஷாருக்கான், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியின் ஆலோசகராக இருக்குமாறு தொகை ஏதும் குறிப்பிடாமல் காசோலை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், கம்பீருக்கும் ஆர்வம் இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அவர் 100% உத்தரவாதம் இருந்தால் மட்டுமே விண்ணப்பிப்பதாகவும், இல்லையெனில் விண்ணப்பிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கேகேஆர் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான், கௌதம் கம்பீரை கேகேஆர் அணியின் ஆலோசகராக வைத்திருக்க விரும்புவதாக கூறியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியில் ஆலோசகராக இருக்க கம்பீருக்கு ஷாருக்கான் தொகை ஏதும் குறிப்பிடாமல் காசோலை ஒன்றை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட கம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், கேகேஆரை விட்டு வெளியேறுவது குறித்து ஷாருக்கானுடன், கம்பீர் ஆலோசனை மேற்கொண்ட பிறகே இறுதியான முடிவு தெரிய வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT