முக்கியச் செய்திகள்

50 லட்சம் கேட்டு மிரட்டுவதாக வாட்ஸப் வீடியோ அனுப்பிய பெங்களூரு மாணவர் சடலமாக குளத்தினடியிலிருந்து மீட்பு!

RKV

சரத், 19 வயது இளைஞன்... தந்தை வாங்கித் தந்த புது மோட்டார் பைக்கை நண்பர்களிடம் காட்டி விட்டு வருவதாகச் சொல்லி செப்டம்பர் 14 ஆம் நாள் வீட்டை விட்டு வெளியே சென்றவன், அதற்குப் பின் வீட்டுக்கே திரும்பவில்லை. தன்னை யாரோ கடத்தி விட்டதாகவும், விடுவிக்க வேண்டுமென்றால் 50 லட்ச ரூபாய் பிணையத்தொகை கேட்பதாகவும் இந்த வார ஆரம்பத்தில் சரத்  தன் பெற்றோருக்கு ஒரு வாட்ஸப் வீடியோ அனுப்பி இருந்தான். 

அந்தத் தகவலை காவல்துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்பதற்குப் பதிலாக கடத்தப் பட்ட இளைஞன் மீதே சந்தேகக் கண்ணோட்டம் கொண்டு தேடுதலைச் சற்றே தாமதப் படுத்தியதின் விளைவு, இதோ இன்று அந்த இளைஞன் பெங்களூரின் ஏதோ ஒரு குளத்தின் அடியிலிருந்து பிணமாக மீட்கப் பட்டிருக்கிறான். முன்னதாக அந்த மாணவன், தனது பெற்றோருக்கு அனுப்பிய வாட்ஸப்பில்...

‘என்னைக் கடத்தியவர்கள் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள், அவர்கள் கேட்ட தொகையை அனுப்பாவிட்டால், என்னைக் கடத்தியது போலவே, என் சகோதரியையும் கடத்தவிருப்பதாக மிரட்டுகிறார்கள்’ அதனால் உடனடியாக அவர்கள் கேட்கும் தொகையை அளித்து என்னைக் காப்பாற்றுங்கள்’

- என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகரி, மிரட்டுவதாக அனுப்பப் பட்டுள்ள வாட்ஸப் வீடியோவில், சரத் துன்புறுத்தப் பட்டதற்கான சுவடுகள் எதுவும் இல்லை. எனவே இது அவரே பெற்றோரை அலைக்கழித்துப் பணம் பறிப்பதற்காகச் செய்த முயற்சியாக ஏன் இருக்கக் கூடாது?! என்ற கோணத்தில் விசாரணை துரிதப் படுத்தப் பட்டது. ஆயினும் காவல்துறையின் நம்பிக்கையைப் பொய்யாக்கி இன்று பரிதாபத்துக்குரிய அந்த இளைஞன், கடத்தப் பட்டவர்களால் கொலை செய்யப்பட்டு, கை, கால்கள் கற்களுடன் பிணைக்கப்பட்டு குளத்தில் வீசி எறியப்பட்டுள்ளார். இன்று அதிகாலையில் குளத்தின் அடியில் கைகால்கள் கட்டப்பட்டு சடலமாகக் கிடந்த சரத் மீட்கப்பட்ட விதம் கொடுமையானது.

சரத் கடத்தல் மற்றும் கொலைக்குக் காரணமானவர்கள் என 6 பேரை தற்போது பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஒருவர் தங்களது குடும்பத்துக்கு நெருக்கமானவர் என சரத் குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர். கொலையான சரத்தின் தந்தை நிரஞ்சன் குமார் வணிக வரித்துறையில் மூத்த அதிகாரி என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT